» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனி 41வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

வியாழன் 7, ஜூலை 2022 11:52:44 AM (IST)



இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 41வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் தலைசிறந்த வீரரும், அனைத்து விதமான கோப்பைகளையும் வென்ற கேப்டனுமான தோனி இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சக கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து பதிவு செய்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "கிராமங்களில் இருந்து வரும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவைத் தொடர, உங்களின் இணையற்ற சாதனைகள் நம்பிக்கை அளித்து வருகிறது. சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி” எனப் பதிவிட்டுள்ளார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory