» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கரோனாவில் இருந்து ரோகித் சர்மா குணமடைந்தார்...!

திங்கள் 4, ஜூலை 2022 11:43:17 AM (IST)



இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கடந்த மாதம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி உள்ளூர் அணியுடன் இணைந்து கடந்த 23-ம் தேதி பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடியது. அப்போது, இந்திய அணியின் கேட்பன் ரோகித் சர்மாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்டில் ரோகித் சர்மா விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். கரோனா பாதிக்கப்பட்ட ரோகித் சர்மா தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ரோகித் சர்மா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று குணமடைந்துள்ளார். கரோனா பரிசோதனையின்போது 'நெகட்டிவ்' என முடிவு வந்துள்ளது. கரோனாவில் இருந்து குணமடைந்ததையடுத்து இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற உள்ள முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory