» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மாவட்ட அளவிலான கபடி போட்டி: ஆத்திக்காடு அணி வெற்றி!

புதன் 8, ஜூன் 2022 10:22:49 AM (IST)தூத்துக்குடி மாவட்ட அளவிலான கபடி இறுதி போட்டியில் ஆத்திக்காடு சிவந்தி மலர் அணி முதல் பரிசை வென்றது. 

சாத்தான்குளம் அருகே ஆத்திகாடு புனித கன்னி மரியாளின் மாசற்ற இருதய மாதா ஆலய நூறாண்டு திருவிழாவை முன்னிட்டு சிவந்தி மலர் ஸ்போட்ஸ் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான 11வது ஆண்டு மின்னொளி கபாடி போட்டி நடைபெற்றது. இதில் ஆத்திக்காடு, கூடங்குளம், அணைந்தகரை, சாத்தான்குளம், உடன்குடி, தட்டார்மடம் உள்ளிட்ட பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. முதல் போட்டியை சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி தொடங்கி வைத்தார். இறுதி போட்டியில் ஆத்திக்காடு சிவந்தி மல் அணியை எதிர்த்து கூடங்குளம் அணி மோதியது. இதில் வெற்றி பெற்று ஆத்திக்காடு அணி முதல் பரிசு மற்றும் சுழறகோப்பையை தட்டிச்சென்றது. 

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் முதல் பரிசு பெற்ற ஆத்திக்காடு அணிக்கு ஊர்வசி எஸ். அமிர்தராஜ் எம்எல்ஏ வழங்கிய ரூ 25 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையை தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி வழங்கினார். 2ஆம் பரிசு பெற்ற கூடங்குளம்¢ணிக்கு முதலூர் ஊராட்சித் தலைவர் பொன்முருகேசன், ரூ15ஆயிரம் பரிசு வழங்கினார். 3ஆம் பரிசு பெற்ற அனைந்தகரை அணிக்கு தெற்கு வட்டார துணைத் தலைவர் முத்துராஜ், ரூ10 ஆயிரம் பரிசு வழங்கினார். 4ஆம் பரிசு பெற்ற கூடன்குளம் 2அணிக்கு தொழிலதிபர் லட்சுமணசுபாஷ், செந்தில்குமார் ஆகியோர் பரிசு வழங்கினர். இதில் சாத்தான்குளம் ஒன்றிய தமமுக செயலாளர் ஆனந்தராஜ், சிவந்தி மலர் கபடி அணி தலைவர் ஜெயக்குமார், திராவிட செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory