» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கடின உழைப்பு தொடரும்: இந்திய அணிக்கு திரும்பியது குறித்து தினேஷ் கார்த்திக் உருக்கம்!

திங்கள் 23, மே 2022 5:46:50 PM (IST)

"கடின உழைப்பு தொடரும்" என இந்திய அணிக்கு திரும்பியது குறித்து தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். 

ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடக்கிறது. ஜூன் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட்டது. அதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்த அணிக்கு திரும்பியுள்ளார். 

தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் போது வர்ணனையாளராக செயல்பட்டார். அதன் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்காக கடினமாக உழைத்த இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்துள்ளார். இந்திய அணியின் முக்கியமான வெற்றிகளில் இவர் சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்தாலும் இந்திய அணியில் இவருக்கான இடம் கடந்த சில வருடங்களாக கேள்விக்குறியாகி இருந்தது.

இந்திய அணிக்கு தேர்வாகியது குறித்து தினேஷ் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "உங்களை நீங்கள் நம்பினால், எல்லாம் சரியாகிவிடும். அனைவரின் ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. கடின உழைப்பு தொடரும்" என தெரிவித்துள்ளார். தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு திரும்பியுள்ளதை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory