» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பெங்களூரு அணிக்காக 7 ஆயிரம் ரன்கள் : விராட் கோலி புதிய சாதனை

வெள்ளி 20, மே 2022 3:20:53 PM (IST)ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக 7 ஆயிரம் ரன்கள் குவித்து விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் 67-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. 

இதில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 73 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார். மேலும் இந்த போட்டியின் மூலம் பெங்களூரு அணிக்காக அவர் 7 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் ஒரே அணிக்காக 7 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory