» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் : தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

செவ்வாய் 17, மே 2022 3:22:06 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான டி20  தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் ஜூன் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை  நடக்கிறது. ஜூன் 9 அன்று டெல்லியில் போட்டி  தொடங்கும். இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா, ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது.

இதனால் இந்த தொடரில் இந்தியா அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா, அல்லது ஷிகர் தவான் நியமிக்கப்படலாம்   என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. குயிண்டன் டி காக், டெம்பா பவுமா, ரீஸா ஹெண்ட்ரிஸ், கிளாசென், கேஷவ்   மஹாராஜ், மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, பர்னெல்,நோர்ஜே , டுவைன் பிரிட்டோரியஸ் , ரபாடா, ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வாண் டர் டுசென், மார்கோ ஜான்சன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory