» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் தங்கப் பதக்கம் : தூத்துக்குடி மாணவி சாதனை

வியாழன் 20, ஜனவரி 2022 10:45:37 AM (IST)

தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் தூத்துக்குடியை சோ்ந்த மாணவி தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கீழ முடிமண் கிராமத்தைச் சோ்ந்த ஜேசுதாஸ்-தாயம்மாள் தம்பதியின் மூத்த மகள் ஸ்ரீநிதி. புதியம்புத்தூா் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். தில்லியில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் பங்கேற்ற மாணவி ஸ்ரீநிதி, தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா். சாதனை படைத்துள்ள மாணவி ஸ்ரீநிதிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனா்.

பதக்கங்கள் வென்ற மாணவி ஸ்ரீநிதி கூறுகையில்: 13 வயதில் இருந்தே சைக்கிள் போட்டியில் பங்கேற்று வருவதாகவும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி ரூ. 5 லட்சம் மதிப்பிலான சைக்கிளை பரிசு அளித்ததன் மூலம் பதக்கங்கள் வெல்ல உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்தாா்.

மேலும், சாலைகளில் வைத்து நடைபெறும் சைக்கிள் போட்டியில் பயன்படுத்தப்படும் சைக்கிளுக்கும், மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் பயன்படுத்தும் சைக்கிளுக்கும் வித்தியாசம் உள்ளது. தற்போது தன்னிடம் சாலையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கக் கூடிய சைக்கிள் மட்டுமே உள்ளதாக தெரிவித்த மாணவி ஸ்ரீநிதி, மைதானத்தில் பயன்படுத்தக்கூடிய சைக்கிளை தனக்கு வழங்க அரசு முன் வந்தால் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தாா். ஆசிய அளவிலான சைக்கிள் போட்டிக்கு தோ்வாகியுள்ள மாணவி ஸ்ரீநிதி அந்தப் போட்டியிலும் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைப்பாா் என அவரது தாய் தாயம்மாள் தெரிவித்தாா்.


மக்கள் கருத்து

RaniJan 24, 2022 - 12:55:05 PM | Posted IP 162.1*****

Ponnu name yethu correct Srimathi or srinithi

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory