» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மும்பை டெஸ்டில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு!

ஞாயிறு 5, டிசம்பர் 2021 8:11:07 PM (IST)



உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று, 332 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா ஆட்டத்தை தொடங்கியது. சிறப்பாக ஆடி வந்த அகர்வால் 62 ரன்கள் எடுத்திருந்தபோது, தனது விக்கெட்டை அஜஸ் படேலிடம் பறிகொடுத்தார். கடந்த சில மாதங்களாகவே சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புஜாரா, 47 ரன்களுக்கு அவுட்டாகி ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார். 

இதையடுத்து, கில், கோலி ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டுவருகிறது. உணவு இடைவேளை வரை, இரண்டு விக்கெட் இழப்புக்கு இந்தியா 142 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து சிறப்பாக பந்து வீசியதன் காரணமாக, கில் 47 ரன்களுக்கும் கோலி 36 ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினர். 

தொடர்ந்து, களமிறங்கிய ஐயர், சாஹா, ஜெயந்த் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு தங்களின் விக்கெட்டை இழந்தனர். அதிரடியாக விளையாடிய அக்சர் படேல், 26 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். இறுதியாக, 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்திருந்தபோது, இந்தியா டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜாஸ், இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டை கைப்பற்றினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடர்ந்த நியூசிலாந்துக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் தொடக்க வீரர்களான டாம் லாதமை 6 ரன்களுக்கும் வில் யங்கை 20 ரன்களுக்கும் ஆட்டம் இழக்க செய்தார். மூத்த வீரர் ராஸ் டெய்லர் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பிய நிலையில், மிச்சேல் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த நிக்கோல்ஸ், நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தார். 

இருப்பினும், அக்சர் வீசிய பந்தில் மிச்சேல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், களமிறங்கிய விக்கெட் கீப்பர் டாம் டக் அவுட்டாகி வெளியேறினார். இறுதியாக, 5 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து 140 ரன்கள் சேர்த்தபோது, மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சிறப்பாக பந்து வீசிய அஸ்வி்ன் மூன்று விக்கெட்டுகளையும் அக்சர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory