» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சயத் முஸ்தாக் அலி டி20: அரையிறுதிக்கு முன்னேறியது தமிழக அணி!

வெள்ளி 19, நவம்பர் 2021 11:53:44 AM (IST)

சயத் முஸ்தாக் அலி டி20 தொடரில் கேரளாவை வீழ்த்தி தமிழக அணி  அரையிறுதிக்கு முன்னேறியது.

டெல்லியில் நடந்த சயத் முஸ்தாக் அலி டி20 போட்டியின் எலைட் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கேரள அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. கேரள அணியில் தொடக்க வீரர்கள் முகமது அசாருதீன் (15), ரோஹன் குன்னும்மால் (51) இருவரும் நல்ல அடித்தளம் அமைத்து 45 ரன்களில் பிரிந்தனர். அடுத்து வந்த சச்சின் பேபி, குன்னும்மாலுடன் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். குன்னும்மால் 51 ரன்கள் சேர்த்த நிலையில் முருகன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் சாம்ஸன் டக் அவுட்டில் வெளியேறினார்.

4-வது விக்கெட்டுக்கு சச்சின் பேபி, விஷ்ணு வினோத் இருவரும் அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர். வினோத் 26 பந்துகளில் 65 ரன்களுடனும் (7 சிக்ஸர், 2 பவுண்டரி), அகில் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தமிழக அணியில் சஞ்சய் யாதவ், முருகன் அஸ்வின் மட்டுமே ஓவருக்கு 5 ரன்கள் வீதம் கொடுத்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 10 ரன்கள் வீதம் வாரி வழங்கினர்.

இதையடுத்து 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே ஜெகதீஸன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹரி நிசாந்த் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். நடுவரிசையில் கேப்டன் விஜய் சங்கர் (33), சாய் சுதர்ஷன் (46) சஞ்சய் யாதவ் (32) ஆகிய மூவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு நகர்த்தினர்.ஷாருக்கான் 19 ரன்களுடனும், முகமது 6 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

பொறுப்புடன் பேட் செய்து தமிழக அணி அரையிறுதிக்குச் செல்லக் காரணமாக இருந்த கேப்டன் விஜய் சங்கர். விஜய் சங்கர், சுதர்ஷன் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால், கேரள அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் எலைட் பிரிவில் தமிழக அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது தமிழக அணி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory