» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நியூஸிலாந்தை வென்றது பாகிஸ்தான் : இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு

புதன் 27, அக்டோபர் 2021 10:24:15 AM (IST)



ஆசிப் அலியின் அதிரடியான ஆட்டம், ஷோயிப் மாலிக்கின் அனுபவம், ஹாரி்ஸ் ராஃபின் பந்துவீச்சு ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பையின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 8 வி்க்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. 135 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு135 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து பேட்டிங் வரிசையைக் குலைத்த பாகிஸ்தான வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் ஆட்டநாயகன் விருது பெற்றார். 4 ஓவர்கள் வீசிய ஹாரிஸ் ராஃப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக வீசிய அப்ரிடி 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 21 ரன்கள் கொடுத்து ஒருவிக்ெகட்டை வீழ்த்தினார். ஆனால் ஹாரிஸ் ராஃப் ஒரு பந்தை 149 கி.மீவேகத்தில் பந்துவீசினாலும் அடுத்த பந்தின் வேகத்தை 120கி.மீவீசி பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தார். தனது பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களை வெளிப்படுத்தி ராஃப் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். ராஃப் கைப்பற்றிய 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட் ஸ்லோவர் பந்துவீச்சில் எடுக்கப்பட்டவை.

பாகிஸ்தான் பேட்டிங்கை பொறுத்தவரை 135 ரன்கள் இலக்கை அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் களமிறங்கியது. கடைசி 5ஓவர்களில் பாகிஸ்தான்வெற்றிக்கு 44 ரன்கள் தேவைப்பட்டது. சோதி வீசிய 16-வது ஓவரில் மாலிக் ஒருபவுண்டரி உள்பட 7 ரன்கள் சேர்த்தார். சவுதி வீசிய 17-வது ஓவரில் ஆசிப் அலி இரு சிக்ஸர்கள் உள்பட 13 ரன்களை விளாசி ஆட்டத்தை திருப்பிவிட்டார். 18 பந்துகளுக்கு 24 சேர்த்தால் வெற்றி என்ற கணக்கில் வந்து பாகிஸ்தான் அணியை நிம்மதி அடையவைத்தது.

பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட நியூஸிலாந்து அணி கடந்த மாதம் எந்தவிதக் காரணமும் இன்றி ஒருநாள், டி20 தொடரை போட்டி தொடங்கும் சிலநிமிடங்களுக்கு முன் ரத்து செய்து தாயகம்திரும்பியது. நியூஸிலாந்து அணியின் செயலால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகுந்த வேதனையிலும், அதிருப்தியிலும் இருந்தது. சர்வதேச அளவில் பெரும் வெற்றிகள்தான் நம்மை தகுதியான அணி என்று திரும்பிப்பார்க்க வைக்கும் என்று வாரியத் தலைவர் ரமிஸ் ராஜா தெரிவித்திருந்தார். நியூஸிலாந்து அணியின் செயலுக்கு பழிதீர்க்கும் வகையில் நேற்று தோற்கடித்து தாங்கள் வெல்லத் தகுதியானவர்கள் என்பதை பாகிஸ்தான் நிரூபித்துள்ளது.

இந்த வெற்றியி்ன் மூலம் ஐக்கிய அரபுஅமீரகத்தில் கடந்த 2016ம் ஆண்டிலிருந்து தான் மோதிய எந்த டி20 போட்டியிலும் தோல்வி அடைந்ததில்லை எனும் பெருமையை பாகிஸ்தான் தக்கவைத்துக் கொண்டது. அதாவது தொடர்ந்து 13 போட்டிகளாக பாகிஸ்தான் அணி தோல்வியைச் சந்திக்காமல் பயணித்து வருகிறது. இந்த வெற்றியின் மூலம் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றி பெற்று 2-வது இடத்தில் இருந்தாலும், ரன்ரேட்டில் உச்சத்தில் இருக்கிறது.

பாகிஸ்தானின் இந்த வெற்றி மறைமுகமாக இந்தியாவுக்கு உதவியுள்ளது. ஒருவேளை நியூஸிலாந்து அணியிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்திருந்தால், நியூஸிலாந்து 2 புள்ளி பெற்றிருக்கும். நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி கட்டாயம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். ஒருவேளே இந்திய அணி வென்றுவிட்டால் 3 அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் இருக்கும். மற்ற 3 அணிகளையும் இந்த 3 அணிகளான ஆப்கன், ஸ்காட்லாந்து, நமிபியாவை இந்த 3 அணிகள் நிச்சயம் வென்றுவி்டும். அப்போது அரையிறுதிக்குள் யார் செல்வது, என்பது ரன்ரேட் அடிப்படையில் முடிவு செய்யப்படும். இது 3 அணிகளுக்குமே பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

ஆனால், தற்போது பாகிஸ்தான் அணி வென்றுவி்ட்டதால், இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டமே நாக்-அவுட் போன்று அமைந்துவிடும். இந்தப் போட்டியில் தோற்கும் அணி அரையிறுதிக்குள் செல்வது கடினமாகிவிடும். ஏறக்குறைய வெளியேற வேண்டியதாகிவிடும்.இந்தியா தோல்வி அடைந்தால் இந்த சுற்றோடு மூட்டையைக் கட்டிக்கொண்டு தாயகம்வர வேண்டும். நியூஸிலாந்து தோல்வி அடைந்தால் டிக்கெட் போட்டுவிடலாம். ரன் ரேட்அடிப்படையில் யார் செல்வது என்ற குழப்பம் இருக்காது, பாகிஸ்தானின் பாதையும் தெளிவாகிவிடும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory