» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ராகுல், கிஷன் அதிரடி : பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!

செவ்வாய் 19, அக்டோபர் 2021 10:13:40 AM (IST)



ராகுல், கிஷன் ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஐசிசி அகாதெமி மைதானத்தில் நடைபெற்ற டி 20 உலக கோப்பை போட்டியின் பயற்சி ஆட்டத்தில் இந்திய, இங்கிலாந்து அணிகள் இன்று மோதின. அதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து வெளியேறினர். 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மாலன் 18 ரன்களில் விக்கெட்டை பறி கொடுத்தாலும், பின்னர் வந்த  ஜானி பேர்ஸ்டோ, லியம் லிவிங்ஸ்டன், மொயின் அலி ஆகியோர் அதிரடியாக விளையாடினர். 36 பந்துகளை எதிர்கொண்ட ஜானி பேர்ஸ்டோ 49 ரன்களையும் 20 பந்துகளை எதிர்கொண்ட லியம் லிவிங்ஸ்டன் 30 ரன்களையும் எடுத்தனர். 20 பந்துகளில் 43 ரன்களை எடுத்த மொயின் அலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக, இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பாக வேகபந்து வீச்சாளர் முகமது ஷமி 40 ரன்களை விட்டு கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

சிறப்பாக பந்து வீசிய வேகபந்து வீச்சாளர் பும்ரா 26 ரன்களை மட்டும் விட்டு கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். 189 என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கே. எல். ராகுல், இஷான் கிஷன் ஜோடி அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. 24 பந்துகளில் 52 ரன்களை எடுத்த ராகுல் மார்க் வூட் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர், களமிறங்கிய கோலி 11 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்த போதிலும், தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கிஷன் 46 பந்துகளில் 70 ரன்களை எடுத்தார். பின்னர், சிறிய காயம் காரணமாக கிஷனால் போட்டியை தொடர முடியாமல் போயிற்று. இருப்பினும், பொறுப்பாக விளையாடிய பந்த் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 14 பந்துகளை எதிர்கொண்ட அவர் 29 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் வில்லி, மார்க் வூட், லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். ஆறு பந்துகள் மீதமிருந்த நிலையில், 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 192 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory