» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் : ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா சாதனை!

சனி 7, ஆகஸ்ட் 2021 5:41:28 PM (IST)

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியின் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் முதல் வாய்ப்பில் 87.03 மீ. தூரம் வீசி  அசத்தினார் நீரஜ் சோப்ரா. நீரஜ் சோப்ராவுக்குச் சவால் அளிக்கக்கூடிய ஜெர்மனியின் வெட்டர் 82.52 மீ மட்டுமே வீசினார். ஜெர்மனியின் வெபர் ஜூலியன் 85.30 மீ தூரம் வீசினார். இதனால் முதல் சுற்றில் நீராஜ் சோப்ரா தான் முதலிடம் வகித்தார். 2-வது வாய்ப்பில் இன்னும் அதிகமாக 87.58 மீ. தூரம் வீசி இந்திய ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தினார். மூன்றாவது சுற்றில் 76.79 மீ. தூரம் வீசினார். 

அதிக தூரம் வீசிய நீரஜ் சோப்ரா, கடைசி மூன்று சுற்றுக்குத் தகுதி பெற்றார். இதில் 12 வீரர்களில் முதலில் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மட்டுமே போட்டியிட்டார்கள். இதில் வெட்டர் இடம்பெறவில்லை. வெஸ்லி 85.44 மீ. தூரம் வீசி 2-ம் இடம் பிடித்தார். முதல் மூன்று சுற்றுகளில் அதிகபட்சமாக 87.58 மீ. தூரம் வீசி நீரஜ் சோப்ரா முதலிடம் வகித்தார். 

4-வது மற்றும் 5-வது சுற்றுகளில் வீசியபோது நீரஜ் சோப்ரா கோட்டைத் தாண்டியதால் அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. 5-வது சுற்றின் முடிவிலும் நீரஜ் சோப்ரா தான் முன்னிலை வகித்தார். இறுதியில் அனைத்து வீரர்களை விடவும் அதிக தூரம் வீசி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.  இதையடுத்து இந்திய அணி டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் அதிகபட்சமாக 7 பதக்கங்களை வென்றுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory