» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச் சண்டை: இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார்

புதன் 4, ஆகஸ்ட் 2021 12:36:51 PM (IST)



ஒலிம்பிக் குத்துச் சண்டை அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

பெண்கள் குத்துசண்டை  69 கிலோ - இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன்    அரை யிறுதிக்கு தகுதி பெற்று இருந்தார். முதல்நிலை வீராங்கனையான துருக்கி நாட்டின் சுர்மெனெலியுடன் அரையிறுதிப் போட்டியில் லவ்லினா மோதினார். முதல் சுற்றில் தாக்குதல் ஆட்டத்தை தொடங்கிய சுர்மெலிக்கு 5 நடுவர்களும் 10 புள்ளிகள் அளித்தனர்.இரண்டாவது சுற்றிலும் அவரது செல்வாக்குத் தொடர்ந்தது. 

காலிறுதிப் போட்டியில், லவ்லினா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் சீன தைபேயின் நியான் சின் சேன்னைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்து உள்ளது.பதக்கம் வெல்லும் மூன்றாவது பெண் லவ்லினா 23 வயதான லவ்லினா அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்; அர்ஜூனா விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடதக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory