» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி-20 போட்டியில் வங்கதேசம் அசத்தல்... ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி!!

புதன் 4, ஆகஸ்ட் 2021 11:41:06 AM (IST)



ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் நசும் அகமதுவின் அபார பந்துவீச்சால் வங்கதேசம் அணி வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷகிப் அல் ஹசன் 36 ரன்னும், மொகமது நயீம் 30 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆனால் வங்கதேச அணியினரின் துல்லிய பந்துவீச்சில் ஆஸ்திரேலியா திணறியது.  11 ரன்னுக்குள் முன்னணி 3 வீரர்களை வெளியேற்றினர். தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மிட்செல் மார்ஷ் 45 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது. வங்கதேசம் சார்பில் நசும் அகமது 4 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான், ஷோரிபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory