» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியா சொதப்பல் பேட்டிங்: டி20 தொடரை வென்றது இலங்கை!

வெள்ளி 30, ஜூலை 2021 4:46:42 PM (IST)இலங்கைக்கு எதிரான 3வது டி-20 போட்டியில் இந்தியா 81 ரன்களுக்குள் சுருண்டது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இலங்கை அணி.

இந்திய அணியின் முக்கிய வீரர்கள் கரோனா அச்சம் காரணமாக கட்டாயத் தனிமையில் இருப்பதால், அனுபவமற்ற இளம் வீரர்களுடன் டாஸ் வென்று பேட்டிங் செய்யக் களமிறங்கினார் இந்திய அணி கேப்டன் ஷிகர் தவண். வெறும் 82 ரன்கள் வெற்றி இலக்கை 15 ஓவர்கள் முடிவதற்கு முன் இலங்கை அணி எட்டியது. இலக்கை விரட்ட ஆரம்பித்த இலங்கை அணி நிதானமாக ரன் சேர்த்து வந்தது. ஆறாவது ஓவரில் ராகுல் சாஹர், அவிஷ்கா ஃபெர்னாண்டோ விக்கெட்டை வீழ்த்தினார். தேவைப்படும் ரன்கள் மிகக் குறைவாகவே இருந்ததால் இலங்கை அணியின் நிதானம் அவர்களை பாதிக்கவில்லை.

தொடர்ந்து ராகுல் சாஹர் இரண்டு விக்கெட்டுகள எடுத்தாலும் அதனால் இலங்கையின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 63 ரன்களுக்கு 8 விக்கெட் என்கிற நிலையில் இருந்தபோது குல்தீப் - சக்காரியா இணை சற்று பொறுப்பாக ஆடி 18 ரன்கள் சேர்த்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 81 ரன்கள் என்கிற கட்டத்தை இந்தியா எட்டியது. ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் ஹஸரங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest CakesNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory