» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

குத்துச்சண்டை: சூப்பர் ஹெவி வெயிட் பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்

வியாழன் 29, ஜூலை 2021 4:49:58 PM (IST)குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் ஜமைக்கா வீரரை 4-1 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் (91 கிலோ எடைக்கு மேல் உள்ள வீரர்கள்) பிரிவு ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன. ஒரு போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் ஜமைக்காவின் ரிகார்டோ பிரௌன்-ஐ எதிர்கொண்டார். இதில் 4:1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். சதீஷ் குமார் 30-27, 30-27, 28-29, 30-27, 30-26.

முதல் ரவுண்டில் ஐந்து நடுவர்களிடமும் தலா 10 புள்ளிகள் பெற்றார். 2-வது சுற்று மற்றும் 3-வது சுற்றில் 3-வது நடுவர் தலா 9 புள்ளிகள் வழங்கினார். ஆகஸ்ட் 1-ந்தேதி நடைபெறும் காலிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜாலோலோவ்-ஐ எதிர்கொள்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory