» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாண்டியாவுக்கு கரோனா: இலங்கைக்கு எதிரான டி20 போட்டி ஒத்திவைப்பு!

செவ்வாய் 27, ஜூலை 2021 4:19:04 PM (IST)

இந்திய வீரர் கிருனாள் பாண்டியாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இலங்கையுடனான 2-வது டி20 ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 ஆட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறவிருந்தது. இந்த நிலையில் இந்தியாவின் ஆல்-ரௌண்டர் கிருனாள் பாண்டியாவுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தது: "கிருனாள் பாண்டியாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருந்த டி20 ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற வீரர்கள் அனைவருக்கும் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் 2-வது டி20 ஆட்டம் புதன்கிழமை நடைபெறும். வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்."


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


Black Forest Cakes

Thoothukudi Business Directory