» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டிஎன்பிஎல் டி-20 தொடர் சென்னையில் 19-ம் தேதி தொடக்கம்

வியாழன் 8, ஜூலை 2021 4:59:50 PM (IST)

சென்னையில் டி.என்.பி.எல். கிரிக்கெட் வருகிற 19-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ம் தேதி வரை நடக்கிறது.

8 அணிகள் பங்கேற்கும் 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை முதலில் நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. இப்போது இந்த போட்டி முழுமையாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு, தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. 

இதன்படி 5-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் வருகிற 19-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ம் தேதி வரை நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி, சேலம் ஸ்பார்டன்சுடன் மோதுகிறது. நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் லீக்கில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை 20-ம் தேதி எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து 24-ம் தேதி நெல்லை ராயல் கிங்சையும், 28-ம் தேதி சேலம் ஸ்பார்டன்சையும், ஆகஸ்டு 1-ம் தேதி திண்டுக்கல் டிராகன்சையும், 4-ம் தேதி மதுரை பாந்தர்சையும், 6-ம் தேதி கோவை கிங்சையும், 8-ம் தேதி திருச்சி வாரியர்சையும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சந்திக்கிறது.

‘2021-ம் ஆண்டு டி.என்.பி.எல். தொடரை பார்வையாளர்கள் இன்றி கடுமையான கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளுக்குட்பட்டு நடத்துவதற்கு தமிழக அரசு முறையாக அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலை முடித்த பிறகு 9-ம் தேதி முதல் அணியினர் சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்க உள்ளனர்’ என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் 2022 தொடரில் 2 புதிய அணிகள் சேர்ப்பு

செவ்வாய் 26, அக்டோபர் 2021 10:54:16 AM (IST)

Sponsored Ads




Nalam Pasumaiyagam



Black Forest Cakes



Thoothukudi Business Directory