» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரினார் தினேஷ் கார்த்திக்!!

திங்கள் 5, ஜூலை 2021 11:19:34 AM (IST)

தினேஷ் கார்த்திக், தனது அருவருக்கத்தக்க பேச்சுக்கு வெளிப்படையாக மன்னிப்புக் கோரினார்.

இந்திய கிரிக்கெட் அணி தினேஷ் கார்த்திக், தற்போது கிரிக்கெட் போட்டிகளுக்கான வர்ணணை பணியிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான  2-வது ஒருநாள் போட்டியின்போது வர்ணணை பணியில் ஈடுபட்டு இருந்த தினேஷ் கார்த்திக், கிரிக்கெட் வீரர்களின் பேட் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

வீரர் பயன்படுத்தும் பேட்டையும், அடுத்தவர் மனைவியையும் ஒப்பிட்டு தினேஷ் கார்த்திக் பேசியதற்கு சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. இதையடுத்து, இலங்கை, இங்கிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் போட்டியின்போது, வர்ணனையாளர் பணியின்போது, தினேஷ் கார்த்திக், தனது முந்தைய அருவருக்கும் பேச்சுக்கு வெளிப்படையாக மன்னிப்புக் கோரினார்.  உண்மையில் எந்த உள்நோக்கத்துடன் அதைபேசவில்லை எனவும் தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் 2022 தொடரில் 2 புதிய அணிகள் சேர்ப்பு

செவ்வாய் 26, அக்டோபர் 2021 10:54:16 AM (IST)

Sponsored AdsNalam Pasumaiyagam
Black Forest CakesThoothukudi Business Directory