» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் டி20 உலகக் கோப்பை: ஐசிசி அறிவிப்பு

செவ்வாய் 29, ஜூன் 2021 5:21:19 PM (IST)

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் டி20 உலகக் கோப்பை நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

இந்தியாவில் வரும் அக்டோபா் - நவம்பா் காலகட்டத்தில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) மாற்றப்படுவதாக பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி தெரிவித்திருந்தார். முன்னதாக, போட்டியை நடத்துவது தொடா்பாக பிசிசிஐக்கு ஐசிசி 4 வார அவகாசம் வழங்கியதை அடுத்து இந்த முடிவே பரவலாக ஊகிக்கப்பட்ட நிலையில், பிசிசிஐ நேற்று உறுதி செய்தது. 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறும் என ஐசிசி இன்று அறிவித்துள்ளது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.  வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா, ஓமன், பப்புவா நியூ கினியா என 8 அணிகள் முதல் சுற்று ஆட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன. 

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் இரு அணிகள் சூப்பர் 12 சுற்றில் இதர எட்டு அணிகளுடன் சேர்ந்துவிடும். முதல் சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஓமனிலும் நடைபெறும். இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறாவிட்டாலும் இந்தியாவின் சார்பாகவே இப்பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் 2022 தொடரில் 2 புதிய அணிகள் சேர்ப்பு

செவ்வாய் 26, அக்டோபர் 2021 10:54:16 AM (IST)

Sponsored Ads


Black Forest CakesNalam Pasumaiyagam

Thoothukudi Business Directory