» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து கடும் பாதிப்பு : விவிடி மேம்பாலம் பணிகளை துவக்க மக்கள் கோரிக்கை!

செவ்வாய் 8, டிசம்பர் 2020 5:54:48 PM (IST)தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விவிடி சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 

தூத்துக்குடியில கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் டூவிபுரம், குறிஞ்சிநகர், தேவர் காலனி, இந்திராநகர், பிரையன்ட் நகர், உள்பட மாநகரில் பெரும்பாலான இடங்களிலும் மழைநீர் தேங்கி கிடக்கிறது. வீடுகளுக்குள் கழிவு நீருடன் மழைநீர் கலந்து தேங்கியிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பிரதான சாலைகளில் மழைநீர் அதிகமாக தேங்கி நிற்பதால், போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளது. 

தூத்துக்குடி பாளை., ரோட்டில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பிரதான சாலையாக விளங்கும் இச்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது மழைநீர் தேங்கியிருப்பதால் சுமார் 1 கிமீ தொலைவில் வாகனங்கள் அணிவகுத்து ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் விவிடி சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காண அங்கு மேம்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேணடும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மக்கள் கருத்து

srinivasanJan 16, 2021 - 11:36:46 AM | Posted IP 108.1*****

worst politician and worst politics..this is bad destiny of our country..

saranDec 10, 2020 - 10:59:06 PM | Posted IP 108.1*****

vvd bridge kalathin kattayam. ippa illana eppovum illa

ராஜாDec 10, 2020 - 10:24:23 AM | Posted IP 173.2*****

2

என்னது ??Dec 8, 2020 - 09:17:11 PM | Posted IP 173.2*****

பணத்தை ஆட்டையை போட அடுத்த திட்டமா??? பாதாள சாக்கடை அமைத்து நாசமாகிய மாநகராட்சி அதை சரி பண்ண வேலையை பாருங்க ...

தூத்துக்குடி ஏரியா காரன்Dec 8, 2020 - 08:56:42 PM | Posted IP 173.2*****

முதல்ல தேங்கி இருக்கும் பாதாள சாக்கடையை கொண்டு சேரும் இடம் வரை தண்ணீர் தேங்கி இருக்காமல் சரி பண்ணுங்க பிறகு பார்க்கலாம் .. ரோட்டுல 3 சாக்கடைகள் ரோட்டு அடியில் தொட்டி அமைத்து சாக்கடை , இடதுபுறம் கடைகளை வாசலில் தோண்டி பாதாள சாக்கடை , வலதுபுறம் கால்வாய் சொல்லி அதுவும் சாக்கடை , உருப்படாத மாநகராட்சி அடுத்து மேம்பாலம் அமைக்க போறாங்களாம் ... மழை நீரை சேமிக்க ஒரு குளம் , குட்டை , கிணறு கூட அமைக்க தெரியாது .. உங்க பணி விளங்கிடும் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory