» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

சாத்தான்குளத்திற்கு பழைய பெயரையே சூட்ட வேண்டும் : அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

வியாழன் 9, ஜூலை 2020 12:24:07 PM (IST)

சாத்தான்குளம் ஊருக்கு மீண்டும் அதன் பழைய பெயரான திருக்கொழுந்தாபுரம் அல்லது வீர மார்த்தாண்ட நல்லூர் என்ற பெயரை அரசு சூட்ட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஊரான சாத்தான்குளம் தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பெலிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு கிளை சிறையில் இறந்தனர் என்ற பிரச்சனையால் உலக அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் சாத்தான்குளம் ஸ்டேசனில் இது முதல் சம்பவம் அல்ல ஏற்கனவே பல பேரை போலீசார் துன்புறுத்தியுள்ளனர் என்ற தகவல்களும் வெளி வந்து கொண்டிருக்கிறது.

இது ஒரு புறமிருக்க சாத்தான்குளம் ஊரின் பெயரை அதன் பழைய பெயரான திருக்கொழுந்தாபுரம் அல்லது வீர மார்த்தாண்ட நல்லூர் என்ற பெயரையே அரசு சூட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வழக்கறிஞர் வேணுகோபால் என்பவரிடம் கேட்ட போது கூறும் போது, சாத்தான்குளம் ஊரின் வரலாறை பார்க்கும் போது அந்த ஊரின் பழைய பெயர் திருக்கொழுந்தாபுரம் மற்றும் வீரமார்த்தாண்ட நல்லூர் என தெரிய வருகிறது. 

இந்த ஊரின் பெயர் சாத்தான்குளம் என மாறியதற்கு 2 காரணங்கள் கூறப்படுகிறது. சாத்து என்றால் வியாபாரம், வணிகம் என பொருள். பொருட்களை சந்தைப்படுத்த வணிகர்கள் வருவதால் சாத்து குளம் என்ற பெயர் மருவி சாத்தான்குளம் ஆனதாகவும், இரண்டாவதாக 17 ம் நூற்றாண்டு காலத்தில் குலசேகர பாண்டியனுக்கு சொந்தமான நிலங்கள் சாத்தான்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்துள்ளது. இவற்றை  சாத்தன் சாம்பவன் என்பவர் கவனித்து கொண்டிருந்தாராம்.

சாத்தன் சாம்பவனுக்கு அப்பகுதியில் வசித்து வந்த ஒருவரது மகள் மீது காதல் ஏற்பட்டதாகவும் அப்பெண்ணும் அவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த பெண் வீட்டார் சாத்தன் சாம்பவனை பழிவாங்கத் திட்டமிட்டு  இரவில், அவர் வரும் வழியில் பொய்குழி வெட்டி அதன்மீது, பிரப்பம்பாயை விரித்து மண்ணைத்தூவி அதை மறைத்தனர். வழக்கம்போல் குதிரையில் வந்த பொய் குழியின் மீது குதிரை கால் வைத்ததும் குதிரையுடன் குழியில் விழுந்துள்ளார். திட்டமிட்டபடி பெரிய கற்களை எறிந்து அவரை எழவிடாமல் செய்து குதிரையுடன் புதைத்துவிட்டார்களாம்.

மறுநாள் இச்செய்தியைக் கேள்வியுற்ற அவரது காதலி அழுது அரற்றி தன் பெற்றோரையும், உறவினரையும் திட்டி சாபமிட்டதாகவும் விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அந்த சாபம் காரணமா அல்லது வேறு காரணங்களாலோ சாத்தான்குளத்தில் பெரிய தொழில் வளர்ச்சிகளோ,வேறு முன்னேற்றங்களோ இன்று வரை ஏற்படவில்லை. 

மேலும் சட்டமன்ற தொகுதியாக இருந்த சாத்தான்குளம் தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு சக்தி உண்டு. எனவே  சாத்தான்குளம் என்ற பெயரை மீண்டும் திருக்கொழுந்தாபுரம் அல்லது வீர மார்த்தாண்ட நல்லூர் என்ற பெயரை அரசு சூட்ட வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் வேணுகோபால் தெரிவித்தார். 


மக்கள் கருத்து

ப. சுகுமார்Oct 17, 2020 - 06:00:51 AM | Posted IP 108.1*****

'சாத்தான்குளம்' பெயர் வரலாறு சுவாரஸ்யமாக இருக்கிறது. 'சாத்தான்' என்றாலே பொதுவாக 'பிசாசு'(Devil) என்று தான் மக்கள் அர்த்தம் கொள்வர். அதனால் 'சாத்தான் குளம்' எனும் பெயரை மாற்றலாம், பொது மக்களின் ஏகோபித்த ஆதரவோடு.

P.S. SundaramJul 9, 2020 - 05:21:06 PM | Posted IP 173.2*****

Sattankulathil Kulam Thundru Poi Vittathal antha nilaiyil athan peyarai thirukolundhapuram and Veeramarthanda Nallur endru peyar mattram karuthai munvaitha vazhakaringar, Venugopal avargaluku naam nandri kadan selutha vendum. Thoothukudiku Thirumanthiranagar endru peyarum ullathu.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thalir Products


Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory