» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாக்காளர்கள் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்: ஆட்சியருடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வாக்குவாதம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 5:07:32 PM (IST)
வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டுள்ளதா கூறி சிவகங்கை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இந்துஜா மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதில் நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 100 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் சிவகங்கை தொகுதி வேட்பாளராக இந்துஜா களமிறங்கியுள்ளார்.
இதனிடையே, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை 11ம் தேதிக்குள் நிறைவு செய்ய தேர்தல் ஆணையம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சிவகங்கை தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் இந்துஜாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்துஜாவின் கணவர் பெயரும் வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த இந்துஜா இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயரும், கணவர் பெயரும் நீக்கப்பட்டு, இறந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்துஜா குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார். இந்த சம்பவம் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:29:20 PM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்: டிச.20ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:07:19 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள்: டிச.23க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:00:22 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிநாள் வசூல்: ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 3:46:25 PM (IST)

2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கும்: விஜய் பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 12:49:39 PM (IST)

பாதாள சாக்கடை திட்டப்பணியால் சாலை சேதம் : சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 12:39:20 PM (IST)










