» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவெகவின் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு: சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

புதன் 5, நவம்பர் 2025 12:49:22 PM (IST)



2026 தேர்தலில் தவெகவின் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க அதிகாரம் வழங்கி சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கி நடைபெற்றது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 

முதலாவதாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அக்கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 12 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமாக 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்கியும், முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய்யை அறிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவெகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என அதிமுக, பாஜக கட்சிகள் தொடர் முயற்சி எடுத்து வந்த நிலையில், அந்த அழைப்பை தற்போது தவெக நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

திராவிட திருடர்கள் கூட்டம்Nov 6, 2025 - 07:01:15 PM | Posted IP 172.7*****

திருடர்கள் கதறல் ஆரம்பம்

நட்சத்திர ஓட்டலில் தீர்மானம்Nov 5, 2025 - 01:39:05 PM | Posted IP 162.1*****

பயங்கரமான தீர்மானமாக இருக்குதே. உலக நாடுகளே ஆச்சர்யப்படுமளவிற்கு உங்கள் தீர்மானம் உள்ளது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory