» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை: அன்பில் மகேஷ் வெளியிட்டார்

செவ்வாய் 4, நவம்பர் 2025 11:34:19 AM (IST)

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஷ் இன்று (நவ.4) வெளியிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 11-ல் தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதி வெளியாகும். பிளஸ் 2 பொதுத் தேர்வை 8.07 லட்சம் மாணவர்களும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8.70 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர். ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 5 நாள்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 



11ஆம் வகுப்பு (arrear பொதுத்தேர்வு அட்டவணை 



12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 


அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு பொதுத் தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory