» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கனிமொழி எம்.பி.யின் தாயார் ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:57:52 PM (IST)
கனிமொழி எம்.பி.யின் தாயார் ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள மகள் கனிமொழி உடன் வசித்து வருகிறார். இவருக்கு அண்மை காலமாகவே அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலி பிரச்சினை இருந்து வருகிறது.இதற்காக கடந்தாண்டு ஜெர்மனியில் உள்ள பிரபல மருத்துவமனைக்குச் சென்று 20 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று இருந்தார். இந்தநிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராசாத்தி அம்மாள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பபட்டுள்ளது என்றும் உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சிகிச்சை பின்னர் ராசாத்தி அம்மாளின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கவே விஜய் களமிறங்கியுள்ளார் : நயினார் நாகேந்திரன்
சனி 11, ஏப்ரல் 2026 5:47:26 PM (IST)

தமிழக உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் அதிரடி மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு!
சனி 11, ஏப்ரல் 2026 5:37:39 PM (IST)

நெல்லையில் 15 நாட்கள் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: ஏப்ரல் 17-ல் தொடக்கம்!
சனி 11, ஏப்ரல் 2026 5:13:32 PM (IST)

இலவசங்களுக்கு நிதி எங்கிருந்து வரும்? கட்சிகள் விளக்கமளிக்க வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 4:17:05 PM (IST)

உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு
சனி 11, ஏப்ரல் 2026 3:50:15 PM (IST)

ஜனநாயகன் பட விவகாரம்: சிபிஐ விசாரணை கோரத் தயாரா? விஜய்க்கு பாஜக சவால்!
சனி 11, ஏப்ரல் 2026 3:29:40 PM (IST)







