» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீரபாண்டிய கட்டபொம்மன் 226-வது நினைவு நாள்: ஸ்டாலின், உதயநிதி, இபிஎஸ் மரியாதை!

வியாழன் 16, அக்டோபர் 2025 11:57:20 AM (IST)



வீரபாண்டிய கட்டபொம்மன் 226-வது நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆதிக்கத்திற்கு அடங்கிப்போக மறுத்து படைத்திரட்டி போரிட்டு - பார்போற்றும் வீரவரலாறு படைத்த வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று. சென்னை கிண்டியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டு இருந்த திருவுருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.

எதிரிகளும் போற்றிய வீரம் - பகைவரை நேருக்கு நேர் எதிர்க்கும் துணிச்சல் - சூழ்ச்சிகளை வீழ்த்தும் செயல்திறன் - இதுவே கட்டபொம்மன் வாழ்க்கை சொல்லும் பாடம். வாழ்க அவரது புகழ். என தெரிவித்துள்ளார் .

எடப்பாடி பழனிசாமி மரியாதை!



சென்னையில் செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் உருவ படத்துக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-வது நினைவு நாளையொட்டி, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory