» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை, தூத்துக்குடியில் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு பெரிய மழை: பிரதீப் ஜான்!
வியாழன் 16, அக்டோபர் 2025 11:08:14 AM (IST)

பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி, நெல்லையில் பெரிய மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனிடையே, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனை தொடர்ந்து 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி, நெல்லையில் பெரிய மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெரிய மழை பெய்துள்ளது.
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மழை இன்னும் 3 மணி நேரம் நீடிக்கும். பின்னர் படிப்படியாகக் குறையும். கடந்த 24 மணி நேரத்தில் காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ., திருச்செந்தூரில் 14.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லையின் பிற உள் பகுதிகளில் நண்பகல் அல்லது மாலை வரை மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்று பகலில் வெயில் அடித்தாலும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொடுமுடியாறு அணையில் நவ.10ம் முதல் தண்ணீர் திறப்பு : தமிழக அரசு ஆணை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:53:55 PM (IST)

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பு: குஷ்பு குற்றச்சாட்டு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:02:56 PM (IST)

குமரி கடற்கரையில் 50- க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
வெள்ளி 7, நவம்பர் 2025 4:58:48 PM (IST)

ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 4:56:19 PM (IST)

மூதாட்டிகள் இருவரை கொன்று நகை கொள்ளை : கொலையாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்!
வெள்ளி 7, நவம்பர் 2025 12:40:16 PM (IST)

எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க சிலர் முயற்சி: நடிகர் அஜித்குமார் விளக்கம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 12:29:05 PM (IST)









அடOct 17, 2025 - 02:02:00 PM | Posted IP 104.2*****