» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 3, அக்டோபர் 2025 5:48:08 PM (IST)
ஆதவ் அர்ஜுனா மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா துறையினர் என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.இந்த சம்பவத்திற்கு திமுக அரசு தான் காரணம் என தவெக நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பதிவில் புரட்சியை உண்டாக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார். உடனே அதனை நீக்கவும் செய்தார். அதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜூனா தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றது. அதில் ஆதவ் அர்ஜுனா ஏதோ புரட்சியை ஏற்படுத்துவது போல கருத்து பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது போல பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் விசாரித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்கிறீர்களா? எனவும் அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சேர்ந்த 7 பேர் - சிபிஎம் மாநில செயலாளர் நெகிழ்ச்சி!
வியாழன் 21, மே 2026 12:39:01 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண்..? மண்டல மேலாளர் மறுப்பு; 2 பேர் பணிநீக்கம்!
வியாழன் 21, மே 2026 11:20:26 AM (IST)

அரசு அலுவலகங்களில் ஆய்வு எனும் பெயரில் தவெகவினர் அத்துமீறல்: தினகரன் குற்றச்சாட்டு
புதன் 20, மே 2026 5:07:09 PM (IST)

சட்டசபையில் விஜய் படத்தை காட்டிய தவெக எம்.எல்.ஏ : சபாநாயகர் கண்டனம் - அவைக்குறிப்பிலிருந்து நீக்கம்!
புதன் 20, மே 2026 4:38:33 PM (IST)

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: தமிழ்நாடு அரசு உத்தரவு!
புதன் 20, மே 2026 4:31:10 PM (IST)










