» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இளையராஜாவுக்கு 13ம் தேதி பாராட்டு விழா : தமிழக அரசு அறிவிப்பு
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 5:36:11 PM (IST)

இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, வருகிற 13ம் தேதி சென்னையில் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
‘இசைஞானி’ இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார். இளையராஜா மேற்கத்திய - கர்நாடக இசை கலந்த ‘வேலியண்ட்’ சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் கடந்த மார்ச் 8-ம் தேதி அரங்கேற்றினார். லண்டனில் இருந்து இளையராஜா திரும்பியபோதே, அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் விதமாக தமிழக அரசு தரப்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா கடந்த ஜூன் 2ம் தேதியன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இசை நிகழ்ச்சி தள்ளிக்கொண்டே சென்றது.
இந்த நிலையில், இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, வரும் 13ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு விழா நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலும் வெளிநாட்டு இசைக் கலைஞர்களின் இசைக் கச்சேரி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

த.வெ.க. அமைச்சர்கள் கமிஷன் வாங்க ஆரம்பித்துவிட்டனர் : அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:39:13 AM (IST)

திருமண ஆசை காட்டிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை : வழக்கறிஞர் கேரளாவில் கைது!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:37:34 AM (IST)

என்ரிகா நிறுவனத்தின் 11 மது வகைகள் மீதான தடை ஒரே நாளில் நீக்கம்: டாஸ்மாக் உத்தரவு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 11:05:39 AM (IST)

லாரி மோதியதில் பரிதாபம்: ஒரே மொபட்டில் சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:26:52 AM (IST)

குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் உற்சாகக் குளியல்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:20:57 AM (IST)

அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம்: தலைமையாசிரியர் இடமாற்றம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:46:01 AM (IST)










யாருSep 10, 2025 - 06:57:01 AM | Posted IP 162.1*****