» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிரசாந்த் கிஷோர் விஜய்யுடன் இணைந்ததால் திமுகவுக்கு சிக்கல் இல்லை: கனிமொழி எம்.பி. பேட்டி
வியாழன் 13, பிப்ரவரி 2025 8:46:01 AM (IST)
பிரசாந்த் கிஷோர் விஜய்யுடன் இணைந்ததால் எங்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: உள்ளாட்சிகளில் 50 சதவீதம் ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய வாய்ப்புகளை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் பல நாடுகளில் ஓட்டுப்போட கூட உரிமை கிடையாது. நம்முடைய முன்னேற்றத்தில் அக்கறை உள்ள ஆட்சி இருந்தால்தான் இவ்வளவும் பெற முடியும்.
பெண்களின் கனவை புரிந்துகொள்ளும் தி.மு.க.தான் வரக்கூடிய தேர்தலிலும் ஆட்சிக்கு வர வேண்டும். ஏனெனில் பெண்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி தி.மு.க.தான். தமிழ்நாடு என்ற பெயர் ஒரு இடத்தில்கூட உச்சரிக்கப்படவில்லை. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திற்கும் நூறுநாள் வேலைக்கான நிதியை தருவதில்லை.
நம்மிடம் இருந்து ஜி.எஸ்.டி. என்ற பெயரில் 1 ரூபாய் வாங்கி அதற்கு 28 பைசா கூட சரியாக தருவதில்லை. தமிழ்நாட்டிற்கு நிதிச்சுமையை ஏற்படுத்தி பா.ஜனதா அரசு தொடர்ந்து ஓரவஞ்சணை செய்து வருகிறது.
தமிழர்களின் உரிமையை விட்டுக்கொடுக்காமல் அடுத்தடுத்த தலைமுறையினர் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள், நம்முடைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டம் முடிந்த பின்பு கனிமொழி எம்.பி., நிருபர்களிடம் கூறுகையில், பிரசாந்த் கிஷோர், தொழில் ரீதியாக யார் அழைத்தாலும் அவருடன் இணைந்து செயல்படுவார். அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. திராவிட முன்னேற்ற கழகம், எங்கள் கட்சியின் உடன்பிறப்புகளை நம்பித்தான் தேர்தலை சந்திக்கிறது.
முதல்-அமைச்சர் எந்த வழியை காட்டுகிறாரோ அந்த வழியில் செயல்பட தி.மு.க. தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். பிரசாந்த் கிஷோர் விஜய்யுடன் இணைந்ததால் எங்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்றார்.
மக்கள் கருத்து
விஜய்யுடன்Feb 13, 2025 - 11:19:28 AM | Posted IP 162.1*****
விடியலுக்கு வந்த சோதனை, விஜயை பார்த்து பயம்.
மேலும் தொடரும் செய்திகள்

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
புதன் 26, மார்ச் 2025 8:06:49 AM (IST)

லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு தலா 3 ஆண்டு சிறை: 12 ஆண்டுகளாக நடந்த வழக்கில் தீர்ப்பு!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:47:50 PM (IST)

குமரி மாவட்டத்திற்கு ரூ.13.32 கோடி நிதி ஒதுக்கீடு : முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி!
செவ்வாய் 25, மார்ச் 2025 7:43:51 PM (IST)

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
செவ்வாய் 25, மார்ச் 2025 5:28:42 PM (IST)

கோவளத்தில் மகளிர் பல்வகை உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்
செவ்வாய் 25, மார்ச் 2025 4:41:51 PM (IST)

நெல்லை சரக டிஐஜி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 4:32:51 PM (IST)

மீடியாவில் வந்தவைFeb 14, 2025 - 05:16:45 PM | Posted IP 172.7*****