» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு!

புதன் 12, பிப்ரவரி 2025 5:51:30 PM (IST)

பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பாதுகாப்பற்ற சூழல் இருந்தால் மாணவர்கள் 14417 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.இந்நிலையில் கல்வி தொடர்பாக மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் எந்தவிதமான சந்தேகங்களையும் கேட்டுத் தெளிந்து கொள்ள கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு 24 மணி நேர இலவச வழிகாட்டி மையம் தொடங்கப்பட்டது. 14417 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து மாணவர்கள் விளக்கங்களைப் பெறலாம் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. 

பெரும்பாலும் கல்வி உதவித்தொகை, மேற்படிப்புக்கான வழிகாட்டுதல் ஆகியவற்றுக்காக இந்த மையத்துக்கு அழைப்புகள் வருவது வழக்கம். தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் கல்வி வழிகாட்டி மையத்துக்கான 14417 என்ற இலவச எண்ணிலேயே மாணவ மாணவிகள் 24 மணி நேரமும் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory