» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொட்டிபாலத்தில் காமராஜர் கல்வெட்டு உடைப்பு: தெக்ஷண மாற நாடார் சங்கம் கடும் கண்டனம்

புதன் 12, பிப்ரவரி 2025 3:25:44 PM (IST)



கன்னியாகுமரி மாத்தூர் தொட்டி பாலத்தில் கர்மவீரர் காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாதலங்களில் ஒன்று மாத்தூர் தொட்டிப்பாலம் ஆகும். ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப்பாலம் ஆகும். ஒருபுறத்தில் இருந்து மறுபுறம் தண்ணீர் செல்லும் ஓடையும், பொதுமக்களும் சென்றுவருவதற்கு வசதியாகவும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் இப்பாலம் கட்டப்பட்டது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், அருவிக்கரை ஊராட்சிக்கு வருமானத்தை அளிக்கும் பகுதியாக மாத்தூர் தொட்டிப்பாலம் இருந்துவருகிறது. 

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நுழைவு வாயில் பகுதியில் டிக்கெட் கவுண்டர் அருகில் காமராஜரின் உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைக்கப்பட்டது. கல்வெட்டில் மாத்தூர் தொட்டிப்பாலம் கட்டப்பட்ட ஆண்டு கட்டுவதற்கான செலவு மற்றும் நீளம், உயரம், தண்ணீர் செல்லும் விபரம் உள்ளிட்டவை அதில் இடம்பெற்றிருந்தது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் அப்பகுதியில் வேலைக்கு சென்ற பணியாளர் தொட்டிபாலத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக திருவட்டார் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தன்னலம் பாராமல் பிறருக்காக உழைத்த உத்தமர். தமிழகத்தில் பொற்கால ஆட்சி புரிந்தவர். ஒருபுறம் செல்வ செழிப்பாகவும் மறுபுறம் தண்ணீர் இன்றி வறட்சியில் சிக்கிதவிக்கும் விவசாயிகளுக்காக இப்பாலத்தை அவரது பொற்கால ஆட்சியில் கட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தனக்கென வாழாமல் ஏழைமக்களுக்காக தன் வாழ்நாளை அற்பணித்தவர். அவரது புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக பெருமைமிக்க தலைவர் காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டை மர்ம மனிதர்கள் உடைத்துவிட்ட சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

இதை திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். காவல்துறை உடனடியாக கல்வெட்டை உடைத்த நபர்களை கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுதர நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம். மேலும் உடைக்கப்பட்ட கல்வெட்டை போன்று புதியதாக காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டை அதே இடத்தில் உடனடியாக நிறுவ வேண்டும் என்று திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors


CSC Computer Education




Thoothukudi Business Directory