» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பராமரிப்பு பணிகள்: திருக்குறள் எக்ஸ்பிரஸ் மாற்று வழித்தடத்தில் இயக்கம்!

புதன் 12, பிப்ரவரி 2025 11:26:30 AM (IST)



பராமரிப்பு பணிகள் காரணமாக கன்னியாகுமரி - நிஜாமுதீன் இடையே இயங்கும் திருக்குறள் எகஸ்பிரஸ் ரயில் மாற்றுவழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை கோட்டத்துக்குட்பட்ட கவரைப்பேட்டை, பொன்னேரி ரயில்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், சென்னை சென்ட்ரலிலிருந்து பிப்.13,16,19,21 தேதிகளில் அகமதாபாத் செல்லும் நவஜீவன் அதிவிரைவு ரயிலும் (எண்: 12656) , பிப்.19-இல் நியூ ஜல்பைகுரி செல்லும் அதிவிரைவு ரயிலும் (எண்: 22611), பிப்.21-இல் புவனேசுவரம் செல்லும் அதிவிரைவு ரயிலும் (எண்: 12829) அரக்கோணம், ரேணிகுண்டா மற்றும் கூடூா் வழியாக இயக்கப்படும்.

அதேபோல் பிப்.12-ஆம் தேதி கன்னியாகுமரி - நிஜாமுதீன் இடையே இயங்கும் திருக்குறள் அதிவிரைவு ரயிலும், பிப்.16-இல் மதுரை - நிஜாமுதீன் இடையே இயங்கும் சம்பாா்க் கிராந்தி அதிவிரைவு ரயிலும், பிப்.18-இல் ராமேசுவரம் - ஃபெரோஸ்பூா் இடையே இயங்கும் ஹம்சபா் அதிவிரைவு ரயிலும் சென்னை கடற்கரை, அரக்கோணம், ரேணிகுண்டா மற்றும் கூடூா் வழியாக இயக்கப்படும்.

மேலும், மதுரை - சன்டிகா் அதிவிரைவு ரயில் பிப்.12 -ஆம் தேதியும், கன்னியாகுமரி - பனாரஸ் காசி தமிழ் சங்கமம் விரைவு ரயில் பிப்.18-ஆம் தேதியும் அரக்கோணம், பெரம்பூா் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக மேல்பாக்கம், ரேணிகுண்டா மற்றும் கூடூா் வழியாக இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்கள் திருத்தணியில் நின்றுசெல்லும்.

பகுதி ரத்து: விஜயவாடாவிலிருந்து பிப்.13,16,19,21 தேதிகளில் சென்னை சென்ட்ரலுக்கு வரும் பினாகினி அதிவிரைவு ரயில் கூடூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் அதேநாள்களில் கூடூரிலிருந்து புறப்பட்டு விஜயவாடா சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital


New Shape Tailors







Thoothukudi Business Directory