» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ரூ.7,375 கோடியில் தொழில் முதலீடு : 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:48:05 PM (IST)

தமிழகத்தில் ரூ.7,375 கோடி மதிப்பு தொழில் முதலீடுகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதன் மூலம் சுமார் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழக சட்டசபை வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கூட உள்ளது. அப்போது தமிழக அரசின் பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்யப்படும். இதன் முன்னோட்டமாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், நேரு உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். காலை 10.55 மணிக்கு தொடங்கிய அமைச்சரவை கூட்டம், நண்பகல் 12.05 மணிக்கு முடிந்தது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், வேலூர், தூத்துக்குடி, திருச்சி, தொழிற்சாலைகள் அமைக்கும் முதலீட்டுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ரூ.7,375 கோடி மதிப்பு தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சுமார் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய திறன் மற்றும் லெதர் அல்லாத காலணி, உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory