» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல : ஆளுநர் மாளிகை அறிக்கை
ஞாயிறு 12, ஜனவரி 2025 5:18:05 PM (IST)
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவர் உரையை வாசிக்காமல் 3 நிமிடங்களில் திரும்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனங்களையும் கருத்துகளையும் முன்வைத்தனர். மேலும் ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில், ஆளுநரின் செயலை விமர்சித்த முதல்-அமைச்சருக்கு பதில் அளிக்கும் வகையில், ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார்.
பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர் (முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின்), கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி.
இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ரூ.7,375 கோடியில் தொழில் முதலீடு : 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:48:05 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்திற்கு 20% வாக்குகள் உள்ளது: பிரசாந்த் கிஷோர் தகவல்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:27:46 PM (IST)

திருக்குறள் பரத நாட்டிய போட்டியில் மாநில அளவில் முதலிடம்: மாணவிகளுக்கு ஆட்சியர் வாழ்த்து
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:46:38 PM (IST)

மாத்தூர் தொட்டிபாலத்தில் காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு சேதம்: காங்கிரஸ் கண்டனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:39:06 PM (IST)

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் புற்றுநோய் தின கருத்தரங்கம்!!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:13:34 PM (IST)

விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:32:09 AM (IST)
