» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

சனி 11, ஜனவரி 2025 8:55:23 PM (IST)



கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவுப் பாறையையும் இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டுப் பாலம் கட்டப்பட்டு, திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு திறக்கப்பட்டது. கடலுக்கு மேலே மிதந்து செல்லும் வகையிலான தோற்றத்தைக் கொடுக்கும் இந்தக் கண்ணாடி இழைக் கூண்டுப் பாலம் திறக்கப்பட்டதிலிருந்து இதில் நடந்து செல்ல சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு இழைபாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து

இது தான்Jan 12, 2025 - 12:07:41 PM | Posted IP 162.1*****

திராவிட மாடல் இன் பேட்ச் ஒர்க்

podhu janamJan 12, 2025 - 10:35:40 AM | Posted IP 162.1*****

Within 3months period of opening by Diravida model CM, Maintenance work arrived. Great achievement and good quality.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory