» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரியில் சமத்துவ பொங்கல் விழா: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்பு!

சனி 11, ஜனவரி 2025 5:50:27 PM (IST)



குமரியில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டினரை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தமிழர் பாரம்பரிய முறைப்படி வரவேற்றார். 

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் இன்று (11.01.2024) நடத்திய சமத்துவ பொங்கல் விழாவில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்து கொண்டு, பேசுகையில் - தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பராம்பரியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பாக சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உள்நாடு மற்றும் அயல்நாடு சுற்றுலாப் பயணிகளுடன் பொங்கல் விழா தமிழகத்தின் பாரம்பரிய முறைப்படி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, சுற்றுலாத்துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் இணைந்து அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மண்பானைகளில் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு மஞ்சள், கரும்பு, கிழங்கு வகைகள், பழங்கள் போன்றவற்றை சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டது. மேலும் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார முறைப்படி வேட்டி, சேலை அணிந்து, பொங்கலிடப்பட்டது.

இவ்விழாவில் தமிழக பாரம்பரியமான பல்வேறு விதமான கிராமிய கலை நிகழ்ச்சிகளான நையாண்டிமேளம், செண்டை மேளம், தப்பாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. உறியடித்தல், வடம் இழுத்தல், கோலப்போட்டி, இசை நாற்காலி மற்றும் கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்பட்டது. நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சமத்துவ பொங்கலில் கலந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

விழாவில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், விவேகானந்தா கல்லூரி முதல்வர் ஜெயந்தி, விவேகானந்தா கல்லூரி செயலாளர் ராஜன், வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாபயணிகள், மாணவ மாணவியர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory