» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை: தவெக அறிவிப்பு!

வெள்ளி 10, ஜனவரி 2025 12:06:52 PM (IST)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட போவதில்லை என பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார். 

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5-ந்தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கல் இன்று (வெள்ளிக் கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி களமிறங்கும் என்று தெரிகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

அ.தி.மு.க. இந்த தேர்தலில் போட்டியிடுவதா அல்லது புறக்கணிப்பதா? என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. பா.ஜனதாவின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் என்று அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் இந்த தேர்தலை எதிர்கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டது. இதற்கிடையே சென்னை பனையூரில், அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் பாலாஜி சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது புஸ்சி ஆனந்த், 'தலைவர் விஜய் கட்சியை தொடங்கும்போதே தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துவிட்டார். நமது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல்தான். இடைப்பட்ட காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிட போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் போட்டியிட போவதில்லை. மேலும் எந்த கட்சிக்கும் நம்முடைய ஆதரவு கிடையாது. நமது இலக்கு பெரிது. எனவே 2026 சட்டமன்ற தேர்தல் என்பதை மனதில் வைத்து கட்சி பணியில் தீவிரமாக செயல்பட வேண்டும்' என்று கூறியதாக தெரிகிறது.


மக்கள் கருத்து

ஈரோடு கிழக்கு தொகுதிJan 10, 2025 - 03:42:23 PM | Posted IP 162.1*****

நீங்க போட்டி போட்டாலும் அப்படியே வாக்குகளை அள்ளி விடூவீர்கள். சும்மா காமெடி பண்ணாமல் நாட்டு நடப்பை பற்றி தெரிந்து கொண்டு ஒரு 10 வருஷம் கழித்து அரசியலுக்கு வரவும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital







Thoothukudi Business Directory