» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ஓய்வு பெற்ற ஐ.ஜி. முருகனுக்கு பிடிவாரண்ட்

சனி 23, நவம்பர் 2024 10:26:51 AM (IST)

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. முருகனுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் முருகன். இவர் ஐ.ஜி.யாக பணியாறி ஓய்வு பெற்றார். இவர் கடந்த 2017-18ம் ஆண்டில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார்.

இதனிடையே, அந்த அலுவலகத்தில் தனக்கு கீழ் பணியாற்றிய பெண் எஸ்.பி.க்கு முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக குறச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி போலீசில் புகார் அளித்தார். மேலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சைதாப்பேட்டை 11வது மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு முன்னாள் ஐ.ஜி. முருகன் ஆஜராகவில்லை. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகத ஓய்வுபெற்ற ஐ.ஜி. முருகனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory