» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தந்தையின் கள்ளக்காதலை கண்டித்த மகள் படுகொலை: பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
சனி 23, நவம்பர் 2024 8:30:21 AM (IST)
நெல்லை அருகே தந்தையின் கள்ளக்காதலை கண்டித்த மகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள பூக்குழி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (66). இவருடைய மகள் பேச்சியம்மாள் (42). அதே பகுதியில் தனது கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்தார். பெருமாளுக்கு 36 வயதான மாரியம்மாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதனை பேச்சியம்மாள் தொடர்ந்து கண்டித்து வந்தார். இதனால் பெருமாளுக்கும், மாரியம்மாளுக்கும் பேச்சியம்மாள் மீது ஆத்திரம் ஏற்பட்டது.
கடந்த 7.4.2015 அன்று தனது வீட்டின் முன்பு பேச்சியம்மாள் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெருமாள், தன் மகள் என்றும் பார்க்காமல் பேச்சியம்மாளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாள், மாரியம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடந்து வந்த காலக்கட்டத்திலேயே பெருமாள் உயிர் இழந்தார்.
நேற்று காலையில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி பத்மநாபன், குற்றம் சாட்டப்பட்ட மாரியம்மாளுக்கு கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கருணாநிதி ஆஜரானார்.
naan thaanNov 23, 2024 - 01:28:32 PM | Posted IP 172.7*****