» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாதது மர்மமாக உள்ளது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!

செவ்வாய் 19, நவம்பர் 2024 5:19:23 PM (IST)



பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார். ஏன் மணிப்பூருக்கு மட்டும் செல்லவில்லை. இது மர்மமாக உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர்  செல்வப்பெருந்தகை கூறினார். 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நாகர்கோவிலி அமைந்துள்ள அவரது சிலைக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி படத்திற்கும் மரியாதை செலுத்தினார்.

பின்பு செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உலக நாடுகள் எல்லாம் இந்தியாவை உற்று நோக்க பார்க்க வைத்த இரும்பு பெண்மணி மாபெரும் தலைவர், இந்திய தேசத்தை தலைநிமிர செய்த இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழாவை குமரி மாவட்டத்தில் கொண்டாடுவதில் பெருமையாக கருதுகிறோம் . பயங்கரவாதத்தை ஒழிக்க அரும்பாடுபட்டவர் இந்திரா காந்தி. எனவே பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளோம். குமரி மாவட்டம் காங்கிரசின் இதயமாக உள்ளது.

ஆட்சியில் பங்கு என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை தான் முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சி தேசிய கட்சி ஆகும். 2004 முதல் 2014 வரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் நாங்கள் பங்கு கொடுத்துள்ளோம். இதுகாங்கிரஸ் பார்முலா. கிராம கமிட்டி அமைப்பதற்காக அந்த திட்டத்தை முன்னோக்கி எடுத்துச்செல்கிறோம். அதுதான் தலையாய கடமையாக பணி செய்து வருகிறோம்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது அவரது தார்மீக உரிமையாகும். அரசியலமைப்பு சட்டத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், இயக்கம் ஆரம்பிக்கலாம். அவரது கருத்தை சொல்லலாம். பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் வரை மணிப்பூரில் கலவரம் இருந்து கொண்டுதான் இருக்கும். எல்லா மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதாவும் அமைதியை சீர்குலைத்து வருகிறது. பிரதமர் பல்வேறு நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார். ஏன் மணிப்பூருக்கு மட்டும் செல்லவில்லை. இது மர்மமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பர்ட், மாவட்ட தலைவர்கள் நவீன்குமார், கே.டி.உதயம், பினுலால்சிங், ஐ.என்.டி.யு.சி.தலைவர் சிவக்குமார், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் டைசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Nov 20, 2024 - 04:34:45 PM | Posted IP 162.1*****

காமராஜர் மறைவிற்குப் பிறகு, காங்கிரஸ் செயலிழந்து விட்டது. இனி உருப்படாது

NAAN THAANNov 20, 2024 - 02:41:49 PM | Posted IP 162.1*****

வீரன் மட்டுமே களம் கண்டு அஞ்ச மாட்டான் ,,, மோடி அப்படி அல்ல .... mic ஐ பார்த்து oh my god என்று சொல்லும் அளவுக்கு PRESSMEET, MEDIA மீது அதீத மரியாதை உள்ளவர்..

காங்கிரஸ்Nov 20, 2024 - 11:07:05 AM | Posted IP 162.1*****

நீங்கள் போகலாமே? சிறப்பாக இருக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory