» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குற்றால அருவிகளில் 3 நாட்களுக்கு பிறகு அனுமதி : சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
செவ்வாய் 19, நவம்பர் 2024 11:30:48 AM (IST)
குற்றாலம் அருவிகளில் குளிக்க 3 நாட்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் பழைய குற்றாலம், மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தடையானது நேற்று 4-வது நாளாக நீடித்தது. எனினும் இந்த அருவிகளுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் குற்றால அருவியில் 3 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் தற்போது குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவியில் நீர்வரத்து சீரான விழுந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிந்து வருகின்றனர்.