» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் பலத்த காற்றுடன் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 5:25:24 PM (IST)
நெல்லை நயினார் குளம் சாலையில் காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும், சேரன்மகாதேவி, முக்கூடல், மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இந்நிலையில், நெல்லை டவுன் நயினார் குளம் சாலையில் காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் போலீசார் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினார்.