» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வயநாடு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்: ஆக்ஸ்போர்டு கல்வி குழுமம் வழங்கல்!

திங்கள் 12, ஆகஸ்ட் 2024 4:47:18 PM (IST)



கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும பள்ளிகள் சார்பில் நிவாரண  பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த மாதம் 30ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கட்டிடங்கள் நிலத்தில் புதைந்து 400 க்கு மேற்பட்டவர்கள் இறந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த நிலச்சரிவு காரணமாக மூன்று கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவிடும் வகையில் தென்காசி ஆக்ஸ்போர்டு கல்வி குழுமத்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி சார்பில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உடைகள் உள்ளிட்டவைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி ஆகியோர் முன்னிலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory