» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புதுக்கடை அருகே ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை: போலீசார் விசாரணை!!!
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 4:18:04 PM (IST)
புதுக்கடை அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம், புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் சேர்ந்தவர் மரிய டேவிட் (56) அந்த பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவருக்கும் ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று இவரை ஆட்டோ வாடகைக்கு வருமாறு போனில் அழைத்து வாலிபர்கள் கூட்டி சென்றனர்.
இந்த ஆட்டோ அரசமூடு பகுதி நெடுமானிகுளம் வரும்போது அங்கே இவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு தொடர்ந்து வாலிபர்கள் மரிய டேவிட்டை சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த இவர் ரத்த காயத்துடன் ஆட்டோவில் ஏறி, தப்புவதற்காக சிறிது தூரம் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து போன் மூலம் தன்னை வெட்டியதாக உறவினர்களிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இது தொடர்பான தகவலின் பேரில் புதுக்கடை போலீசார் சம்பவ இடம் சென்று டேவிட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவமனை செல்லும் வழியில் அவர் இறந்துள்ளார். இதையடுத்து குழித்துறை அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருங்கல் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது சம்மந்தமாக புதுக்கடை போலீசார் முதற்கட்டமாக 3பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மும்மொழி கொள்கை விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:48:24 PM (IST)

மூதாட்டியை கட்டி போட்டு 10 பவுன் தங்க நகை பறித்த மர்ம நபர்கள் : போலீஸ் தீவிர விசாரணை!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:44:32 PM (IST)

பா.ஜனதா ஆட்சி செய்தால் ஏழை எளிய மக்கள் வாழவே முடியாது: நெல்லையில் ப.சிதம்பரம் பேச்சு
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:33:34 PM (IST)

ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1562 ஏக்கர் சொத்து ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:47:55 AM (IST)

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் அதிபருக்கு அரிவாள் வெட்டு : 3பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:39:59 AM (IST)

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை..!
சனி 15, பிப்ரவரி 2025 5:44:14 PM (IST)
