» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு: ஜூலை 1ஆம் தேதி தொடங்குகிறது!

செவ்வாய் 25, ஜூன் 2024 5:31:05 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 2/2ஏ தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வருகிற ஜூலை 1ஆம் தேதி தொடங்கவுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி II-ல் உள்ள உதவி ஆய்வாளர் (தொழிலாளர் துறை), இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் (நிலை-II) உள்ளிட்ட பதவிகளில் உள்ள 507 காலி பணியிடங்களுக்கும் மற்றும் தொகுதி IIA-ல் உள்ள தணிக்கை ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர்(கூட்டுறவுத் துறை) உள்ளிட்ட பதவிகளில் 1820 காலிபணியிடங்களுக்கும் மொத்தம் 2327 காலிபணியிடங்களுக்கான குரூப் II/IIA தேர்வின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இத்தேர்வுக்கு 19.07.2024 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். முதல்நிலைத் தேர்வு 14.09.2024 அன்று நடைபெறவுள்ளது. தேர்வு நடைமுறை, தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் வயது வரம்பு போன்ற கூடுதல் விவரங்களை https://www.tnpsc.gov.in என்ற இணையத் தளத்தில் அறியலாம்.

TNPSC குரூப்-II/IIA தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.07.2024 (திங்கட்கிழமை) அன்று தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அலுவலக இலவச நூலகத்தில் உள்ளன. இப்போட்டித் தேர்வுக்கான அறிமுக வகுப்பு 01.07.2024 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள 17C, சிதம்பரம் நகர், பெருமாள்புரம் C காலனியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 01.07.2024 அன்று காலை 10.30 மணிக்கு Passport Size புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

மேலும் 13.07.2024 அன்று நடைபெறும் TNPSC குரூப்-I தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு மாநில அளவிலான முழு மாதிரி தேர்வு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 02.07.2024, 05.07.2024 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன் கேட்டுக்கொள்கிறார்.


மக்கள் கருத்து

Surya Prakash RJun 27, 2024 - 10:33:43 AM | Posted IP 162.1*****

இதில் பங்கேற்க நான் விரும்புகிறேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital


Thoothukudi Business Directory