» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் ரூ.1.4 கோடியில் கால்வாய் சீரமைப்பு பணிகள் : ஆட்சியர் ஆய்வு!!

செவ்வாய் 25, ஜூன் 2024 12:38:11 PM (IST)



குமரி மாவட்டத்தில் ரூ.1.4 கோடி மதிப்பில் தோவாளை கால்வாய் நிரந்தரமாக சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், திடல் ஊராட்சிக்குட்பட்ட உலக்கரி – தூவச்சி பகுதியில் நடைபெற்று வரும் தோவாளை சானல் நிரந்தர சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இன்று (25.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது தோவாளை ஊராட்சி ஒன்றியம் திடல் ஊராட்சிக்குட்பட்ட உலக்கரி - தூவச்சி பகுதி தோவாளை சானலில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மணல் மூட்டைகள் அடுக்கி போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தோவாளை சானலினை நிரந்தரமாக சீரமைக்க வேண்டுமென விவசாயிகள், விவசாய சங்கங்கள், கால்வாய் பாசன விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் தோவாளை சானலினை சீரமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு இக்கோரிக்கையினை ஏற்று வெள்ள சேத பகுதிகளை நிரந்தரமாக மீட்டெடுக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.4 கோடி மதிப்பில் சுமார் 15 கி.மீ நீளத்தில் சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து தோவாளை சானலினை நிரந்தரமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை தரமானதாகவும், உறுதி தன்மையுடனும் அமைத்திட துறை சாரந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, பணிகளை விரைந்து முடித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் பொறி.ஜோதிபாசு, தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தினி பகவதியப்பன், உட்கோட்ட அலுவலர் பொறி.கிங்ஸ்லி, விவசாய சங்க பிரதிநிதிகள் ராகிசன் முத்து, செண்பகசேகரன் பிள்ளை உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory