» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கள்ளச் சாராயம் வழக்கில் கைதான 4 பேருக்கு 15 நாள் காவல் : நீதிமன்றம் உத்தரவு!

வெள்ளி 21, ஜூன் 2024 10:55:58 AM (IST)

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் வழக்கில் கைதான 4 பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்த விவாகாரத்தில், கைதான கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் மற்றும் சின்னதுரை ஆகிய 4 பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்க மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் கொத்துகொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டதும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் சரணடைந்தார். சின்னத்துரை என்பவர், மெத்தனால் கலந்த சாராயத்தை தன்னிடம் விற்றதாக போலீஸாரிடம் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, கோவிந்தராஜின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரனிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். சின்னதுரையும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் மற்றும் சின்னதுரை ஆகிய 4 பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors

CSC Computer Education






Thoothukudi Business Directory