» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் ஒரு புதிய செவிலியர் கல்லூரி உதயம்!
வெள்ளி 14, ஜூன் 2024 4:32:09 PM (IST)
குமரி மாவட்டத்தில் மேலும் ஒரு புதிய செவிலியர் கல்லூரிக்கான அரசு அங்கீகாரத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கிராமத்தில் கே.எம்.எம்.சி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் இயங்க இருக்கும் கே.எம்.எம்.சி நர்சிங் கல்லூரிக்கான அரசு அங்கீகாரத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டி.எம்.ஐ பவுண்டேஷன் நிர்வாகிகளிடம் வழங்கினார். இந்நர்சிங் கல்லூரிக்கு இந்த கல்வியாண்டு முதல் 100 மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி வழங்கும்போது தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உடனிருந்தார். டி.எம்.ஐ பவுண்டேஷன் நிர்வாகிகள் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆகியோருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நன்றியை தெரிவித்தனர்.
Aswin rajJun 15, 2024 - 08:46:18 PM | Posted IP 162.1*****